தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் எழு… பியூஷ் கோயல்

Minister Piyush Goyal: தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து நாட்டிற்காக ஏதாவது உருவாக்கும் அனைவரையும் இந்த விழா கொண்டாடுகிறது” என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Published on: January 16, 2026 at 7:58 pm

புதுடெல்லி, ஜன.16, 2026: தேசிய ஸ்டார்ட்அப் தினத்தை முன்னிட்டு, மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) புதுடெல்லியில், இந்திய தொழில்முனைவோர்களை பாராட்டினார். அப்போது, “தோல்விகளை சந்தித்தாலும் மீண்டும் எழுந்து நாட்டிற்காக ஏதாவது உருவாக்கும் அனைவரையும் இந்த விழா கொண்டாடுகிறது” என்றார்.

மேலும், சமூக ஊடகங்களில் தனது கருத்துகளை பகிர்ந்த அவர், போட் (boat) நிறுவனத்தின் இணை நிறுவனர் அமன் குப்தாவின் உரையை ஆதரித்து, ஸ்டார்ட்அப் உலகில் வெற்றி பெற வேண்டிய உண்மையான மனப்பாங்கை வலியுறுத்தினார். அதாவது, “தொழில்முனைவோர் கதைகள் வெற்றியை மட்டுமே குறிக்கவில்லை, மாறாக தொடர்ச்சியான முயற்சி மற்றும் மனவலிமை என்பதையும் வெளிப்படுத்துகின்றன.
தோல்விகளை மீறியும் தொடர்ந்து முன்னேறும் நிறுவுநர்கள், இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றார்.

மேலும், “இதையே ஒத்த உணர்வுடன், அமன் குப்தா இந்திய ஸ்டார்ட்அப் சமூகத்திடம் நேர்மையான செய்தியை பகிர்ந்தார். இன்று, ஸ்டார்ட்அப் நிறுவுநர்கள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் ஒரே மேடையில் நிற்பது, நாட்டின் வளர்ச்சியில் ஸ்டார்ட்அப்புகளின் முக்கியத்துவத்தை காட்டுகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பில்ட் கனெக்ட் 2026 மாநாடு.. பிப்.19 புதுடெல்லியில் நடக்கிறது!

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல் காங்கிரஸ்!
Rahul Gandhi

நாடாளுமன்றத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி.. பாத்திரம், கரண்டியுடன் திரிணாமூல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com