முன்பு பெரிய குடும்பங்களின் குழந்தைகளுக்கே தொழில் செய்ய வாய்ப்பு.. பிரதமர் நரேந்திர மோடி

National Startup Day 2026: முன்பு பெரிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு தொழில் செய்யும் வாய்ப்பு இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Published on: January 16, 2026 at 7:00 pm

Updated on: January 16, 2026 at 7:01 pm

புதுடெல்லி, ஜன.16, 2025: தேசிய ஸ்டார்ட்அப் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற “ஸ்டார்ட்அப் இந்தியா” திட்டத்தின் பத்து ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றினார்.
அப்போது, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் புதுமையாளர்கள் முன்னிலையில் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், நிதி தொழில்நுட்பம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை போன்ற துறைகளில் பணியாற்றும் இளைஞர்களின் யோசனைகள் மட்டுமல்லாமல், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் உயர்ந்த இலட்சியங்கள் தான் அவரை அதிகம் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் முயற்சிகளுக்கும் புதுமைக்கும் அதிக வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த சூழ்நிலையை சவாலாகக் கொண்டு “ஸ்டார்ட்அப் இந்தியா” திட்டம் தொடங்கப்பட்டது. இன்று அதன் விளைவாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலாக வளர்ந்துள்ளது.

2014-இல் நாட்டில் 500-க்கும் குறைவான ஸ்டார்ட்அப்புகள் இருந்த நிலையில், இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்டவை செயல்படுகின்றன. மேலும், 2014-இல் நான்கு யூனிகார்ன்கள் மட்டுமே இருந்த நிலையில், இன்று சுமார் 125 யூனிகார்ன்கள் செயல்படுகின்றன.
2025 ஆம் ஆண்டில் மட்டும் 44,000 புதிய ஸ்டார்ட்அப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் நாட்டில் புதிய பண்பாட்டை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். முன்பு பெரிய தொழில் குடும்பங்களின் குழந்தைகளுக்கே வணிகம் தொடங்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் இன்று, Tier-2 மற்றும் Tier-3 நகரங்கள், கிராமங்கள் ஆகிய இடங்களில் இருந்து வரும் இளைஞர்களும் தங்கள் சொந்த ஸ்டார்ட்அப்புகளை தொடங்கி, அடிப்படை சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்துள்ளனர்.

இந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு தான் அவருக்கு மிகுந்த மதிப்புடையதாக இருப்பதாக பிரதமர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க ரூ.1.50 லட்சம் முதலீடு.. பி.பி.எஃப் vs எஸ்.ஐ.பி.. எதில் பெஸ்ட் ரிட்டன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com