New delhi: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலகங்களை சீன கம்யூனிஸ்ட் குழுவினர் பார்வையிட்டனர். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
New delhi: ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அலுவலகங்களை சீன கம்யூனிஸ்ட் குழுவினர் பார்வையிட்டனர். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Published on: January 14, 2026 at 6:19 pm
புதுடெல்லி, ஜன.14, 2026: சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) பிரதிநிதிகள், செவ்வாய்க்கிழமை, புதுடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் (RSS) மூத்த நிர்வாகிகளை சந்தித்தனர். இதற்கு முன், அவர்கள் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர்களுடன் கட்சித் தலைமையகத்தில் திங்களன்று கலந்துரையாடல் நடத்தியிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கருத்து
இந்தச் சந்திப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை துணை அமைச்சர் தலைமையில் வந்த பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள சீன தூதர் Xu Feihong உட்பட RSS-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்தனர்.
“ஆர்.எஸ்.எஸ் எப்போதும் அனைத்து சிந்தனைகளும், மதங்களும் சேர்ந்தவர்களை சந்திக்கத் தயாராக உள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்த்ரேய ஹோசபாலே அவர்களை சந்தித்தனர்.
இது ஒரு அன்பு சந்திப்பு மட்டுமே” என்றார். எனினும், சந்திப்பில் நடந்த உரையாடல்களைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ், இந்த சந்திப்பின் நேரம் மற்றும் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியது. “சந்திப்பில் பிரச்சினை இல்லை. உரையாடலிலும் பிரச்சினை இல்லை. பிரச்சினை BJP-யின் இரட்டை முகம், போலித்தனம், ஏமாற்றம் மற்றும் வஞ்சகத்தில் உள்ளது,” என காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறினார்.
இதையும் படிங்க: செம்புக் குடத்தில் தங்கம்.. மதிப்பு இத்தனை லட்சமா? இன்ப அதிர்ச்சியில் குடும்பம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com