Vaiko: ஆட்சியில் பங்கு என எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Vaiko: ஆட்சியில் பங்கு என எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Published on: January 12, 2026 at 12:36 pm
சென்னை ஜனவரி 12, 2026; ஆட்சியில் பங்கு என எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11, 2026) கூறினார்.
ஆட்சியில் பங்கு கோரிக்கை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற உள்ளது; இந்த நிலையில் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைப்பதற்கும் ஏற்கனவே உள்ள கட்சிகளை வெளியேறாமல் பார்த்துக் கொள்வதற்கும், ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அரசியல் கட்சிகளுக்கு இடையே பேரம் அதிகரித்துள்ளது; நடிகர் விஜய் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், தன்னுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிப்பேன் என்றார். அவர் பற்ற வைத்த அரசியல் தீ தற்போது பரவி வருகிறது.
முதல் கட்டமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், திமுகவிடம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என கோரிக்கை விடுத்து வருகின்றனர். காங்கிரசாரின் இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தீவிரமாக மறுத்துவிட்டதாக, அக்கட்சியின் அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார்.
வைகோ பேட்டி
இந்த நிலையில் சமத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கேட்டீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த வைகோ, ” ஜனநாயகத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம்; அவர்கள் அவர்களுக்கு தோன்றுவதை பேசுகிறார்கள். மேலும் அவர்களுக்கு பேச உரிமை உள்ளது, பேசுகிறார்கள்; ஆனால் எங்களைப் பொருத்தமட்டில் இந்த கருத்தில் உடன்பாடு இல்லை. மேலும் எங்களைப் பொருத்தமட்டில் நாங்கள் இப்படி எந்த நிபந்தனையும் வைக்கவில்லை; வைக்கப் போவதும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க; 45 நாள் தொடர் போராட்டம்.. சென்னையில் காங்கிரசார் உண்ணாவிரதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com