M K Stalin: இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியவர் என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
M K Stalin: இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியவர் என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

Published on: January 7, 2026 at 7:10 pm
சென்னை ஜனவரி 7, 2026; தமிழக அரசு இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை, மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிவித்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் கோரி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை சமாதானம் செய்யும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டம் வெளியானது.
இதையும் படிங்க: திருப்பரன்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்.. சென்னை உயர் நீதிமன்றம்!
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
இலவச மடிக்கணினி மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே செயல்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. இதற்கிடையில், தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் மு.க ஸ்டாலின்.
இதையும் படிங்க: மருத்துவமனைகளை குடிப்பகங்கள் ஆக்கியதே திமுகவின் சாதனை.. அன்புமணி ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com