M K Stalin: சென்னையில் 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
M K Stalin: சென்னையில் 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

Published on: January 3, 2026 at 1:13 pm
சென்னை ஜனவரி 3 2026: சென்னையில் 621 பேருக்கு காவல் உதவி ஆய்வாளர்களுக்கான, பணி நியமன ஆணையை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். இந்த பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் சீருடை தேர்வு பணியகத்தால் தேர்வு செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணையை மு.க ஸ்டாலின் வழங்கினார்.
கனிவாக நடந்து கொள்ளுங்கள்..
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், ” காவல்துறை உங்கள் நண்பன் என்பது வெறும் வாசகமாக இல்லாமல் ரியாலிட்டியாக இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மேலும் காட்சிக்கு எளியவராக, கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்ட மு க ஸ்டாலின், ” புகார் அளிக்க வருவோரிடம் புன்னகை மற்றும் அக்கறை இவை எல்லாம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க; ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து விவாதிக்க தயாரா? மு.க ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com