Kanimozhi: திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் கனிமொழி.
Kanimozhi: திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார் கனிமொழி.

Published on: December 29, 2025 at 4:58 pm
Updated on: December 29, 2025 at 4:59 pm
சென்னை, டிச. 29 2025; திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், அதற்கு பதில் அளித்துள்ளார் கனிமொழி.
திமுக கூட்டணியில் விரிசல்
திமுகவுடன் கூட்டணிகை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் விரும்பவில்லை என்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன.
தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கடல் நிலைமையை ஒப்பிட்டு இவர் பதிவிட்டிருந்தார். வந்த பதிவில் தமிழ்நாட்டின் கடன் உத்தரப்பிரதேசத்தை விட அதிகமாக உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.
பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த பதிவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட சிலரும் விளக்கம் அளித்து இருந்தனர்; அந்த விளக்கத்தில் தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் பரப்புரை கூட்டம் ஒன்றை பேசிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ” தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாக இல்லை; அந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் பலமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள்” என்றார்.
நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி பதில்
இது தொடர்பாக தூத்துக்குடி எம்பி கனிமொழியிடம் நிருபர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த கனிமொழி,” அவர் (நயினார் நாகேந்திரன்) வேண்டுமென்றால் கனவு காணட்டும்” என்றார்.
இதையும் படிங்க; பாஜகவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆனது யார்? நானா.. திருமாவளவனா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com