தங்கம் விலையில் மாற்றம் இல்லை: வெள்ளி கிலோ ரூ.1000 உயர்வு!

Gold Rate today | இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ.6680 ஆகவும், சவரன் ரூ.53400 ஆகவும் தொடர்கிறது. வெள்ளி கிலோ ரூ.1000 அதிகரித்துள்ளது.

Published on: September 10, 2024 at 11:22 am

Updated on: September 10, 2024 at 1:31 pm

Gold Rate today | இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை இன்று (செப். 10, 2024) 10 கிராமுக்கு ரூ.71,720 ஆக காணப்படுகிறது. அதாவது, கிராம் ஒன்றின் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.7,142 ஆக உள்ளது. மேலும், 22 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,743 ஆக இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 0.07% குறைந்துள்ளது. மேலும், கடந்த பத்து நாட்களில் மஞ்சள் உலோகம் 0.37% குறைந்துள்ளது. வெள்ளியின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.833.3 ஆக உள்ளது.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று கிராம் ரூ.6680 ஆக நிர்ணயிக்கப்படடு, சவரன் ரூ.53400 ஆக உள்ளது. அதேபோல், 24 காரட் தங்கம் கிராம் ரூ.7135 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.57,080 ஆக காணப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை தங்கம் கடந்த 4 நாள்களாக இதே விலையில் தொடர்கிறது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.91 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ ரூ.91 ஆயிரமாக உள்ளது. நேற்று கிலோ ரூ.90 ஆயிரமாக காணப்பட்ட நிலையில் வெள்ளி கிலோ ரூ.1000 அதிகரித்துள்ளது.

டெல்லி

டெல்லியில் வெள்ளியின் விலை கிலோ ரூ.83,180 ஆக காணப்படுகிறது. அதேநேரத்தில் டெல்லியில் தங்கத்தின் விலை ரூ.71,600/10 கிராம் ஆக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் ஃபியூச்சர்ஸ்

அக்டோபர் 2024 காலாவதியுடன் தங்க எம்சிஎக்ஸ் ஃபியூச்சர் ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ.157 அதிகரித்து ரூ.71,583க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. அதேசமயம், எம்.சி.எக்ஸ் ஃப்யூச்சர்களில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ.823 அதிகரித்து ரூ.83,580-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மிகப்பெரிய நிவாரணம்.. GST 5% குறைப்பு: விலை குறையுமா புற்றுநோய் மருந்துகள்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com