MLA Velmurugan objects to Vijay : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பார்த்து அங்கிள் என சொல்வது விஜய்க்கு நல்லதல்ல என எச்சரித்துள்ளார் வேல்முருகன் எம்.எல்.ஏ.
MLA Velmurugan objects to Vijay : தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பார்த்து அங்கிள் என சொல்வது விஜய்க்கு நல்லதல்ல என எச்சரித்துள்ளார் வேல்முருகன் எம்.எல்.ஏ.

Published on: December 27, 2025 at 8:07 pm
சென்னை, டிச. 27, 2025: தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை எச்சரித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், ” தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை பார்த்து, “சார், அங்கிள்” என பேசுவது நடிகர் விஜய்க்கு நல்லதல்ல” என எச்சரித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், ஆளும் கட்சிகளான திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒருமுறை தனது பொதுக்கூட்டத்தில் அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா என திமுகவை விமர்சித்தார். மேலும் திமுகவில் நிலவும் குடும்ப அரசியல் குறித்தும் நடிகர் விஜய் விமர்சித்து வருகிறார்.
அண்மையில் நடிகர் விஜய் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவை தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி என பலமுறை விமர்சித்தார். இதற்கு திமுகவினர் எதிர்வினை ஆற்றினார்கள்.
இந்த நிலையில் விஜய் தனது பொதுக்கூட்டங்களில், தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலினை சார் அல்லது அங்கிள் உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கிறார் என குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.
இதற்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் விஜய்க்கு எதிராக எதிர்வினை ஆற்றி வருகின்றன. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ-வும், விஜய்க்கு எதிராக எதிர்வினையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com