Edappadi Palaniswami open challenge to M K Stalin : நேருக்கு நேர் மேடை ஏற தயாரா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
Edappadi Palaniswami open challenge to M K Stalin : நேருக்கு நேர் மேடை ஏற தயாரா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

Published on: December 27, 2025 at 6:00 pm
Updated on: December 27, 2025 at 6:01 pm
சென்னை, டிச. 27, 2025: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில்,” நேருக்கு நேர் மேடை ஏற தயாரா? என வினவி உள்ளார். இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?
பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எடுத்த ஓபன் சேலஞ்ச் இன்னும் அப்படியே உள்ளது. அ.தி.மு.க குறித்து நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் அளிக்க தயார்; அதேபோல் திமுகவின் ஆட்சி குறித்து நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் பரப்புரைகளை தற்போது அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா பிரதான கட்சியாக உள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டவர்கள் இன்னமும் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் நேரத்தில் சரியான கூட்டணியை நாங்கள் தேர்வு செய்வோம் என தெரிவித்துள்ளார். புதிய கட்சியான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. இதனால் தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க; 3 முறை வேளாண் கண்காட்சி நடத்தியுள்ளோம்.. திராவிட மாடல்தான் முன்னோடி.. மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com