Cold Wave: டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, “குளிர் அலை” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
Cold Wave: டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, “குளிர் அலை” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Published on: December 26, 2025 at 3:18 pm
புதுடெல்லி, டிச.26, 2025: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குளிர் அலை நிலைமைகள் காணப்படும் என முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை
அதன்படி, “டெல்லி, ஹரியானா, சந்தீகார், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு ராஜஸ்தான் பகுதிகளில் குளிர் அலை வீசக்கூடும். உத்தரப்பிரதேசம், பீஹார், சப்-ஹிமாலயன் மேற்கு வங்காளம், சிக்கிம், உத்தரகாண்ட் பகுதிகளில் இன்று குளிர் நாள் காணப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம்
மேலும், “டெல்லி, ஹரியானா, சந்தீகார், அருணாசலப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், ஒடிசா, சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இன்று அடர்ந்த முதல் மிக அடர்ந்த பனிமூட்டம் நிலவும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம்
டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, இன்று (டிச.26, 2025) காலை 6 மணிக்கு டெல்லியின் சராசரி AQI 292 என பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் ரூ.5க்கு சாப்பாடு.. அடல் உணவகம் திறப்பு.. இதன் சிறப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com