Saudi Arabia: சவுதி அரேபியாவில் இருந்து 24 ஆயிரம் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; மேலும் இது தொடர்பாக சவுதி இஸ்லாமாபாத்துக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Saudi Arabia: சவுதி அரேபியாவில் இருந்து 24 ஆயிரம் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; மேலும் இது தொடர்பாக சவுதி இஸ்லாமாபாத்துக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Published on: December 20, 2025 at 1:06 pm
Updated on: December 20, 2025 at 1:07 pm
ஜெட்டா, டிசம்பர் 20 2025: இஸ்லாமிய ஷரியத் சட்ட திட்டங்கள், மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது சட்டவிரோதம் ஆகும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 ஆயிரம் பிச்சைக்காரர்கள் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்த சவுதி அரேபியா அரசு உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை முதல் கட்டமாக 6 ஆயிரம் பிச்சைக்காரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் கவலை
இதற்கிடையில் மற்றொரு இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பாகிஸ்தானியர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு சுற்றுலா விசா மூலம் வரும் பாகிஸ்தானியர்களின் சிலர் இங்கு பிச்சை எடுப்பது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். எனினும் பாகிஸ்தானியர்கள் தொடர்ச்சியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா விசா மூலமாக வருகை தந்து, பிச்சை எடுப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதற்கிடையில் அஸர் பைஜான் நாட்டிலிருந்தும், பிச்சை எடுத்ததாக 2500 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; மாணவர் தலைவர் ஒஸ்மான் மரணம்.. வங்கதேசத்தில் இந்திய கலாசார மையத்துக்கு தீவைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com