Winter Session of Parliament: 19 நாள் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிச.19, 2025) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, முதலில் மக்களவையும், பின்னர் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.
Winter Session of Parliament: 19 நாள் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (டிச.19, 2025) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, முதலில் மக்களவையும், பின்னர் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டன.

Published on: December 19, 2025 at 6:15 pm
புதுடெல்லி, டிச.19, 2025: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது நிறைவு உரையில், அவையின் உற்பத்தித் திறன் சுமார் 111% எனக் கூறினார். மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற்றதாகவும், அவை சீராக நடைபெற உறுப்பினர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது நிறைவு உரையில், மாநிலங்களவை சுமார் 92 மணி நேரம் செயல்பட்டு 121% உற்பத்தித் திறனை பதிவு செய்ததாகக் கூறினார்.
இந்தக் கூட்டத் தொடரில் 59 தனியார் உறுப்பினர் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரலாற்று மற்றும் ஜனநாயக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து உயர்தரமான விவாதங்கள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும், தேசியப் பாடல் “வந்தே மாதரம்” 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் 82 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் 57 உறுப்பினர்கள் தங்கள் மதிப்புமிக்க கருத்துகளை பகிர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ராதாகிருஷ்ணன், நேற்று (டிச.18, 2025) எதிர்க்கட்சியினர் உருவாக்கிய குழப்பம் குறித்து கவலை தெரிவித்தார். கோஷங்கள் எழுப்புதல், பலகைகள் காட்டுதல், விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சரை இடையூறு செய்தல், ஆவணங்களை கிழித்து அவையின் நடுவில் எறிதல் போன்றவை ஒழுக்கமற்ற நடத்தையாகும் எனக் கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் உறுப்பினர்கள் தங்கள் நடத்தை குறித்து சிந்தித்து, இத்தகைய ஒழுங்கின்மையை மீண்டும் செய்யாமல் இருப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க : 2 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்; குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com