Dhurandhar box office collection: ஹிந்தியில் வெளியாகி உள்ள துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Dhurandhar box office collection: ஹிந்தியில் வெளியாகி உள்ள துரந்தர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Published on: December 19, 2025 at 4:37 pm
புதுடெல்லி, டிச 19, 2025: ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி உள்ள துரந்தர் திரைப்படம் 12 நாளில் ரூபாய் 400 கோடி வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளது. இது புஷ்பா 2 (Hindi) படத்தின் இரண்டாவது வார வசூலை தாண்டி உள்ளதோடு இந்தி திரைப்பட வரலாற்றில் இரண்டாவது வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் மாறி உள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் துரந்தர். இந்த படத்தில் அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது.
இந்த படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கூறி குவைத், பக்ரைன், ஓமன், கத்தார், சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் படம் வெளியாகும் முன்பே ரிஷப் ஷெட்டியை கேலி செய்த விவகாரத்தில் இந்த படத்திற்கு ஆதரவு தரமாட்டோம் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர்.
இந்நிலையில் பல தடைகளையும் தாண்டி துரந்தர் திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளது. இது ரன்வீர் சிங்கின் 400 கோடி க்ளப்பில் இணைந்துள்ள முதல் திரைப்படமாக மாறியுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் ரூ. 640 கோடியும் ஸ்டரீ 2 ரூ. 627 கோடியும் இந்தியில் அதிக வசூல் செய்த திரைப்படங்களாகும். துரந்தர் இந்த திரைப்படங்களின் வசூலை தாண்டுமா என்பது வரும் வாரங்களில் தெரியும்.
இதையும் படிங்க சர்வதேச படவிழாவில் தேர்வான ஹோம்பவுண்ட்.. இந்தியப் படத்துக்கு புதிய அங்கீகாரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com