Narendra Modi Oman Visit: பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஓமன் செல்கிறார்.
Narendra Modi Oman Visit: பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) ஓமன் செல்கிறார்.

Published on: December 17, 2025 at 7:08 pm
புதுடெல்லி, டிச.17, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாலை ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை முடித்து, மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக ஓமன் செல்கிறார்.
ஓமன் நாட்டின் தலைவரான சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஓமன் செல்கிறார். பிரதமருடன் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் இணைந்து செல்கிறார்கள்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவும் ஓமனும், மோடி அவர்களின் இரு நாள் பயணத்தின் போது, விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மீது கையொப்பமிட வாய்ப்புள்ளது.
ஆகாஷ்வாணி செய்தியுடன் பிரத்யேகமாக பேசிய ஓமன் இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீநிவாஸ், இரு நட்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தையும், காத்திருக்கும் பிற புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சிறப்பாக பயன்படுத்த முயற்சி செய்கின்றன என்றார்.
இந்தியா மற்றும் ஓமன் 70 ஆண்டுகள் தூதரக உறவுகளையும், நூற்றாண்டுகள் பழமையான தனிப்பட்ட உறவுகளையும் கொண்டாடும் நிலையில், பல்வேறு மூலோபாய துறைகளில் இரு நாடுகளும் புதிய உயரங்களை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நரேந்திர மோடி சிறந்த நண்பர்; இந்தியா அற்புதமான நாடு.. டொனால்ட் ட்ரம்ப்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com