இளையோர் ஆசிய உலககோப்பை.. இந்தியா-மலேசியா இன்று மோதல்!

Under 19 Asia Cup 2025: 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் இன்று (டிச.16, 2025) மோதுகின்றன.

Published on: December 16, 2025 at 1:44 pm

Updated on: December 16, 2025 at 1:45 pm

புதுடெல்லி, டிச.16, 2025: 19 வயதுக்கு உட்பட்ட ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்று (செவ்வாய்க்கிழமை) மலேசியாவை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள செவன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்றாவது குழு நிலை போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும்.

ஆயுஷ் மஹாத்ரே தலைமையிலான இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, தனது வெற்றி தொடரை நீட்டிக்க முனைகிறது. அன்றைய போட்டியில் ஆரோன் ஜார்ஜ் 88 பந்துகளில் 85 ரன்கள் குவித்து, இந்தியா 240 ரன்கள் எடுக்க உதவினார். இந்நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

இந்த தொடரில், மொத்தம் எட்டு ஆசிய அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து போட்டியிடுகின்றன. இந்தியா, UAE (ஐக்கிய அரபு அமீரகம்), பாகிஸ்தான் மற்றும் மலேசியாவுடன் குழு A-வில் இடம் பெற்றுள்ளது.

மறுபுறம், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் குழு B-வில் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற மானு, ஷிம்ரன் ப்ரீத் கவுர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com