India’s Unemployment Rate : 2025 நவம்பரில் இந்தியாவில் வேலைஇல்லா விகிதம் குறைந்துள்ளது.
India’s Unemployment Rate : 2025 நவம்பரில் இந்தியாவில் வேலைஇல்லா விகிதம் குறைந்துள்ளது.

Published on: December 16, 2025 at 12:05 pm
புதுடெல்லி, டிச.16, 2025: இந்தியாவின் வேலை இல்லா விகிதம் (UR) இந்த ஆண்டு நவம்பரில் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த நிலையாகும். இது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தும்.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) மாதாந்திர தொழிலாளர் படை மற்றும் வேலை இல்லா தரவுகளின்படி, கிராமப்புற வேலைஇல்லா விகிதம் புதிய குறைந்த நிலையான 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புற வேலைஇல்லா விகிதம் 6.5 சதவீதமாகக் குறைந்து, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பதிவான மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
இதற்கிடையில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR) நவம்பரில் 55.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் LFPR கடந்த மாதம் 58.6 சதவீதமாக உயர்ந்துள்ளது, நகர்ப்புறங்களில் அது சிறிது குறைந்து 50.4 சதவீதமாக உள்ளது. இதில், எல்.எஃப்.பி.ஆர் தற்போதைய வாராந்திர நிலை (CWS) அடிப்படையில், வேலைவாய்ப்பில் செயலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையை மதிப்பிடும் ஒரு அளவுகோல் ஆகும்.
இதையும் படிங்க: மாதம் ₹2 ஆயிரம் SBI எஸ்.ஐ.பி முதலீடு.. ₹.24.40 லட்சம் ரிட்டன்.. இந்த ஸ்கீமை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com