Nuclear Energy Bill: மக்களவையில் அணுசக்தி மசோதா திங்கள்கிழமை (டிச.15, 2025) தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
Nuclear Energy Bill: மக்களவையில் அணுசக்தி மசோதா திங்கள்கிழமை (டிச.15, 2025) தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

Published on: December 16, 2025 at 10:41 am
புதுடெல்லி, டிச.16, 2025: இந்திய அணு ஆற்றலை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மசோதா (2025) திங்கள்கிழமை (டிச.15,2025) மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை, அணு ஆற்றல் துறை மாநில அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதா, நாட்டின் மக்களின் நலனுக்காக அணு ஆற்றல் மற்றும் அயனீக கதிர்வீச்சை அணு மின் உற்பத்திக்காக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இதன் பாதுகாப்பான மற்றும் உறுதியான பயன்பாட்டிற்கான வலுவான ஒழுங்குமுறை அமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மசோதா, அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியத்தை அமைப்பதையும், அணு ஆற்றல் குறைதீர் ஆலோசனைக்குழுவை நிறுவுவதையும் முன்வைக்கிறது. தொடர்ந்து, அணு தொடர்பாக ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் மத்திய அரசின் பொறுப்பை இந்த மசோதா வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு “அணு பொறுப்பு நிதி”யை நிறுவியுள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர்.
இதையும் படிங்க முதலமைச்சரை துணைவேந்தர் ஆக்கும் தீர்மானம்.. நிராகரித்த குடியரசுத் தலைவர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com