Selva Perunthagai: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.
Selva Perunthagai: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ் இடையே கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.

Published on: December 15, 2025 at 2:48 pm
புதுடெல்லி டிசம்பர் 15 2025: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை புதுடெல்லி அரசியல் சாசன மன்றத்தில் இன்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தனது கட்சி எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, ” இந்தியா கூட்டினியைப் பொறுத்தவரை மிகவும் வலிமையாக உள்ளது. இன்று தேர்தல் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தினோம்; அப்போது தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டோம். வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்; இறந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
2026 சட்டமன்றத் தேர்தல், கூட்டணி தொடர்பாக டெல்லி அரசியல் சாசன மன்றத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக மாநில தலைவர் செல்வ பெருந்தகையின் பேட்டி முழு விவரம்.! #newdelhi | #delhi | #TNCongress | #selvaperunthagai | @DravidanTimes pic.twitter.com/UIZ1rFJJYe
— Dravidan Times (@DravidanTimes) December 15, 2025
ஆனால் ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது என்பது தான் எங்களது கருத்து; இதற்காக நாங்கள் போராடுவோம்” என்றார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை,” திமுக காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது; தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எந்த காங்கிரஸ் நிர்வாகியும் பேசவில்லை; தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி இல்லை” என்றார்.
இதையும் படிங்க; தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி? டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com