Air pollution in Delhi: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, டெல்லி காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4வது நாளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Air pollution in Delhi: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, டெல்லி காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 4வது நாளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published on: December 4, 2025 at 2:31 pm
Updated on: December 4, 2025 at 2:35 pm
புதுடெல்லி, டிச.4, 2025: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நான்காவது நாளில், டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை (டிச.4, 2025) போராட்டம் நடத்தினர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியில் பல சுவாச நோய்களுக்குக் காரணமாகக் கருதப்படும் காற்று மாசுபாடு நெருக்கடி குறித்து விவாதம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
காற்று மாசுபாட்டை தேசிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை முன்வைத்தனர். இந்தத் தீர்மானத்தை மாணிக்கம் தாகூர், மணீஷ் திவாரி மற்றும் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் ஆகியோர் முன்மொழிந்தனர்.
காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தின் மூன்றாம் நாளில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முககவசங்களை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்தனர். காற்று மாசுபாடு போன்ற பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேப்டன் மிஸ்ஸிங்.. இண்டிகோ விமானங்கள் ரத்து.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com