Red Fort blast terror attack: செங்கோட்டை குண்டுவெடிப்பு பயங்கரவாத நிதியுதவி தொடர்பான விசாரணையில் அல் ஃபலாஹ் நிறுவனரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
Red Fort blast terror attack: செங்கோட்டை குண்டுவெடிப்பு பயங்கரவாத நிதியுதவி தொடர்பான விசாரணையில் அல் ஃபலாஹ் நிறுவனரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

Published on: November 19, 2025 at 11:02 am
புதுடெல்லி, நவ.19, 2025: அமலாக்க இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை, (நவ.18, 2025) அல்ஃ-பலாஹ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் அல்ஃ-பலாஹ் குழுமத்தின் தலைவர் ஜவாத் அஹ்மத் சித்தீகியை பணமோசடி வழக்கில் கைது செய்துள்ளது. இந்த வழக்கு பயங்கரவாத நிதி தொடர்புகளுக்காகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பல்கலைக்கழகம் ஃபரிதாபாத் நகரில் அமைந்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ஆம் தேதியன்று கார் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்தக் கார் குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சித்தீகி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு வழக்கில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட டாக்டர் முசம்மில் ஷகீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் சயீத் உட்பட பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பல நபர்கள் விசாரணையில் உள்ளனர். செங்கோட்டை அருகே வெடித்த ஹூண்டாய் i20 காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் நபி, பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க : 2013ல் திடீர் மாயம்.. 2015ல் திருமணம்- விவாகரத்து.. யார் இந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத்?
குண்டுவெடிப்புக்கு முன்னதாக ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு பெரிய வலையமைப்பை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் ஃபரிதாபாத்தில் உள்ள இரண்டு வாடகை அறைகளில் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்களைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மசூதியைச் சேர்ந்த ஒரு மதகுரு உட்பட பல கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள் தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கல்குவாரியில் சிக்கிய 15 பேர்.. ஒருவர் மரணம்.. உ.பி.யில் பரிதாபம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com