தீபிகா படுகோன்- ரன்வீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தீபிகா படுகோன்- ரன்வீர் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
Published on: September 8, 2024 at 10:52 pm
Deepika Padukone | பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரன்வீர் சிங், தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அலியா பட, ஷ்ரத்தா கபூர் ரூபினா திலியாக், கிருத்தி சனோன், பூஜா ஹெக்டே, பரினீதி சோப்ரா மற்றும் ஷர்வரி உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
ரசிகர்கள் வாழ்த்து
நடிகர் அர்ஜூன் கபூர், “தேவதை பிறந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன் தான் கர்ப்பமாக இருப்பதை 2024 பிப்ரவரியில் அறிவித்தார். அம்பானி திருமண கொண்டாட்டங்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியானது.
அதற்கு முன்னர் தீபிகா படுகோன் தான் நடித்து கொடுத்த வேண்டிய படங்களில் நடித்து முடித்தார். கர்ப்பம் தரித்த பின்னர், சூர்ய நமஸ்காரம், யோகா உள்ளிட்டவற்றில் ஈடுபட்டார் என்பத குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திரா காந்தி ஆக கங்கனா ரணாவத்: எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கை குழு பச்சைக்கொடி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com