Sampath Singh resigned: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் சம்பத் சிங், பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
Sampath Singh resigned: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் சம்பத் சிங், பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

Published on: November 3, 2025 at 6:42 pm
குருகிராம், நவ.3, 2025: ஹரியானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பதவியில் இருந்து சம்பத் சிங் இன்று (திங்கள்கிழமை) ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் அவர் அடிப்படை காங்கிரஸ் பொறுப்பில் இருந்தும் விலகினார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பத் சிங், உள்ளூர் கட்சி பிரமுகர் ஆவார். இவர் தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி.) கட்சியில் இருந்து 2009ல் விலகினார். பின்னர் இவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் சம்பத் சிங் படிப்படியாக முன்னேறினார்.
இவருக்கு பல்வேறு பொறுப்புகள், பதவிகள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில் இன்று அவர் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும், கட்சியினர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பக சம்பத் சிங் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பியுள்ளார். அதில் காங்கிரஸின் சமீபத்திய மோசமான செயல்பாடுகள் குறித்தும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைக்கு 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பத் சிங், இரண்டு முறை அமைச்சர் பொறுப்பும் ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரின் விலகல் உள்ளூர் காங்கிரஸ் கட்சிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 2 நாள் பயணம்.. கேரளா சென்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com