Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Published on: October 10, 2025 at 2:15 pm
Updated on: October 10, 2025 at 2:19 pm
திருநெல்வேலி, அக்.10, 2025: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள பழக்கடை ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் இரவு நேரத்தில் கடையில் இருந்த பேட்டரி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றார்.
இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள பழக்கடை ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் இரவு நேரத்தில் கடையில் இருந்த பேட்டரி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றார். #thisaiyanvilai | #Tirunelvelidistrict | #CCTVFootage | #thefts #CCTVCamera | @DravidanTimes pic.twitter.com/qkjuWsYznP
— Dravidan Times (@DravidanTimes) October 10, 2025
மேலும், “அப்பகுதியில் பல்வேறு கடைகள் இருப்பதால் அங்குள்ள வியாபாரிகள், திருட்டில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபரை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தத் திருட்டு சம்பவம் திசையன்விளை பேருந்து நிலையம் அருகேயுள்ள நேருஜி கலையரங்கம் அருகில் உள்ள பழக்கடையில் நடந்துள்ளது.
இந்தப் பகுதியில் பகல் நேரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகும். இந்த நிலையில், போலீசார் இரவு நேர ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க : மு.க ஸ்டாலின் கோவை வருகை.. பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை.. அண்ணாமலை பரபரப்பு கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com