Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 வயது முதியவர் 35 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். மறுநாள் அதிர்ச்சி காத்திருந்தது.
Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 வயது முதியவர் 35 வயது பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். மறுநாள் அதிர்ச்சி காத்திருந்தது.
Published on: October 7, 2025 at 8:27 pm
லக்னோ, அக்.7, 2025: 75 வயது முதியவருக்கு தனது வயதான காலத்தில் தோழமை வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூரில் சங்ருராம் என்ற 75 வயது முதியவர் ஒருவர் 35 வயதான மன்பவதி என்ற பெண்ணை மணந்தார். ஆனால் மறுநாள் காலையில் இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் மாவட்டத்தின் குச்முச் கிராமத்தில் நடந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு தனது முதல் மனைவி இறந்த பிறகு அந்த முதியவர் தனியாக வசித்து வந்துள்ளர்.
இதற்கிடையில், திருமணத்திற்குப் பிறகு சங்ருராம் என்ற நபரின் திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரின் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முதல் திருமணத்தில் குழந்தைகள் இல்லாததால், அவர் தன் வயதில் பாதி வயதுடைய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : ஜெய்ப்பூர் மருத்துவமனையில் பயங்கர தீ.. 8 நோயாளிகள் உயிரிழப்பு!
இருவருக்கும் இரண்டாவது திருமணம்
மேலும், இது மன்பவதிக்கும் இரண்டாவது திருமணமாகும். அவருக்கு முந்தைய கணவரிடமிருந்து மூன்று குழந்தைகள், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது.
சந்தேகம்
இந்த நிலையில் முதியவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முதியவரின் உறவினர்கள் டெல்லியில் வசிக்கின்றனர். மேலும், அவர்கள் டெல்லியில் இருந்த வந்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர்.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com