Sabarimala Ayyappa Temple: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய தங்கத் தகடுகள், செப்புத் தகடுகளாக மாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sabarimala Ayyappa Temple: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய தங்கத் தகடுகள், செப்புத் தகடுகளாக மாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: October 5, 2025 at 1:13 pm
கொச்சி, செப்.5, 2025: சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க நகைகள் மற்றும் செப்புத் தகடுகள் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இது குறித்து, பந்தளம் கொட்டாரம் நிர்வாக சங்க செயலாளர் எம்.ஆர். சுரேஷ் வர்மா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “1998 ஆம் ஆண்டு விஜய் மல்லையா சபரிமலைக்கு சமர்ப்பித்த தங்கத் தகடுகள் எவ்வாறு செப்புத் தகடுகளாக மாறியது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “இந்த முக்கியமான பணிக்கான நிதியுதவி பெற்ற தேர்வாளரால் அவர்கள் நிதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் திறமையானவர்களா என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
(நன்றி. ஏ.என்.ஐ)#WATCH | Kochi, Kerala: On Sabarimala gold row, Pandalam Kottaram Nirvahaka Sangham secretary M R Suresh Varma says, "There should be a thorough investigation into how the gold plates submitted to Sabarimala by Vijay Mallya in 1998 turned into copper plates… An investigation… pic.twitter.com/I6Gqmn8Ypz
— ANI (@ANI) October 5, 2025
ஊழியர்கள் பொறுப்பு
தொடர்ந்து, “இதற்கு ஊழியர்கள் பொறுப்பு“ என்ற அவர் ஐயப்ப பக்தர்களின் வேண்டுகோள் படி தவறு செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.இதையடுத்து, உண்மையை வெளிக்கொணர ஸ்ரீ உன்னிகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் 2019 க்கு முன்பு ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க :ட்விட்டரில் பாகிஸ்தான் பெண்ணுக்கு பதிலளித்த சாமியார்.. டெல்லியில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com