சென்னை, அக்.3, 2025: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர், முதலீட்டாளர்கள் வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். குறிப்பாக, வங்கிகள் பொதுவாக நீண்ட கால வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. மூன்று ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தில் ஒரு வருட நிலையான வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதத்தை வழங்க வாய்ப்புள்ளது.
அந்த வகையில் நீண்ட கால முதலீடு எஃப்.டி முதலீடு குறித்து பார்க்கலாம்.
வங்கி
3 ஆண்டு முதலீடு பொது (%)
3 ஆண்டு முதலீடு மூத்தக் குடிமக்கள் (% )
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
6.6
7.10
பேங்க் ஆஃப் பரோடா
6.50
7.00
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
6.30
6.80
ஃபெடரல் வங்கி
6.40
6.90
கோடக் மகிந்திரா வங்கி
6.40
6.90
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
6.60
7.10
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
6.45
6.95
வங்கி எஃப்.டி வட்டி தரவுகள்
ஃபெடரல் வங்கி ஆகஸ்ட் 18, 2025 அன்று அமலுக்கு வந்த வட்டி விகிதங்களின்படி, ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட கால நிலையான வைப்புத்தொகைகளுக்கு 6.4%, 6.5% மற்றும் 6.5% வழங்குகிறது. எஸ்.பி.ஐ மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு வழக்கமான குடிமக்களுக்கு 6.3% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.8% வட்டியும் வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஜூலை 15, 2025 அன்று அமலுக்கு வந்துள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வழக்கமான குடிமக்களுக்கு மூன்று ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு 6.50% வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7% வட்டியையும் வழங்குகிறது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மூன்று ஆண்டு கால வைப்புத்தொகைகளுக்கு 6.6% வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.1% வட்டியையும் வழங்குகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.