Anbumani Ramadoss: “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” என கோரியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: “தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்” என கோரியுள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Published on: September 30, 2025 at 11:45 am
சென்னை, செப்.30, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள செவ்வாய்க்கிழமை (செப்.30, 2025) விடுத்துள்ள அறிக்கையில், “தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும்.
அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விஜய்க்கு போன் போட்ட ராகுல் காந்தி.. தமிழக அரசியலில் பரபரப்பு!
மேலும், “தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சினை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.
மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : கரூர் கூட்ட நெரிசல் மரணம்.. த.வெ.க நிர்வாகி மதியழகன் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com