Davidson Devasirvadham: கரூர் விஜய் கூட்டத்துக்கு 20 பேருக்கு ஒருவர் என 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்.
Davidson Devasirvadham: கரூர் விஜய் கூட்டத்துக்கு 20 பேருக்கு ஒருவர் என 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்.
Published on: September 28, 2025 at 9:08 pm
சென்னை, செப்.28, 2025: கரூரில் சனிக்கிழமை (செப்.27, 2025), தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பேரணி நடத்தினார்.. அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். இந்நிலையில், அங்கிருந்தவர்கள் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என அரசு மீது குற்றஞ்சாட்டினார்கள்.
கூட்ட நெரிசலில் குழந்தையை பறிகொடுத்த பெண் ஒருவர் போலீஸ் பாதுகாப்பு சரியாக இல்லை. நாங்கள் இருந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பில் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாதுகாப்புக்கு நின்ற போலீசார் குறித்து தமிழக சட்டம் ஒழுங்க கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் பேட்டியளித்தார்.
அப்போது, “கரூரில் விஜய்யின் பரப்புரைக்கு 20 பேருக்கு 1 போலீஸ் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்” என்றார்.
இதையும் படிங்க : ‘கண்கள் கலங்கி தவிக்கிறேன்’.. ரூ.20 லட்சம் இழப்பீடு.. த.வெ.க விஜய் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com