Rihanna: கிராமி இசை விருதை வென்றுள்ள ரிஹானா அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
Rihanna: கிராமி இசை விருதை வென்றுள்ள ரிஹானா அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
Published on: September 27, 2025 at 12:10 pm
Updated on: September 27, 2025 at 12:11 pm
பார்படாஸ், செப்.26, 2025: பார்படாசின் செயின்ட் மிக்கேல் என்ற பகுதியை சேர்ந்த “We Found Love” பாடகரும் “Praise the Lord” ராப்பருமான ரிஹானா அழகிய பெண் குழந்தையை செப்.24ஆம் தேதி வரவேற்றார்.
37 வயதான ரிஹானா தனது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தில், தனது பிறந்த மகளை இளஞ்சிவப்பு போர்வையில் போர்த்தி வைத்திருந்தார். தொடர்ந்து, இரண்டாவது புகைப்படத்தில், அவர் ரிப்பன்களுடன் கூடிய ஒரு ஜோடி இளஞ்சிவப்பு கையுறைகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில், ரிஹானாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ரிஹானா, “நான் ஒரு கருப்பினப் பெண், நான் ஒரு கருப்பினப் பெண்ணிலிருந்து வந்தவள்” என்றார். தொடர்ந்து, “தாம் ஒரு கருப்பினப் பெண்ணிலிருந்து வந்தவள்” என்பதை இருமுறை அழுத்திக் கூறினார்.
இதையடுத்து, ‘ஒரு கருப்பினப் பெண்ணிலிருந்து வந்த நான், ஒரு கருப்பினப் பெண்ணைப் பெற்றெடுக்கப் போகிறேன்” என்றார். ராப்பர் ராக்கி உடன் இது அவருக்கு மூன்றாவது குழந்தை ஆகும்.
இதையும் படிங்க: வெட்கம் இல்லை.. ஒசாமாவுக்கு அடைக்கலம்.. ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com