Vairamuthu heartfelt poem for SPB: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவு தினம் இன்று (செப்.25, 2025) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Vairamuthu heartfelt poem for SPB: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவு தினம் இன்று (செப்.25, 2025) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
Published on: September 25, 2025 at 2:50 pm
சென்னை, செப்.25, 2025: மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “பாசமுள்ள பாட்டுக்காரா!
நினைவு நாளில் அல்ல
உன்னை
நினைக்காத நாளில்லை
நீ பாடும்போது
உடனிருந்த நாட்கள்
வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்
‘பொன்மாலைப் பொழுது’
உன் குரலின்
அழகியல் வசீகரம்
‘சங்கீத ஜாதிமுல்லை’
கண்ணீரின் திருவிழா
‘காதல் ரோஜாவே’
கவிதைக் கதறல்
‘வண்ணம்கொண்ட
வெண்ணிலவே’
காதலின் அத்வைதம்
‘பனிவிழும் மலர்வனம்’
சிருங்காரச் சிற்பம்
‘காதலே என் காதலே’
தோல்வியின் கொண்டாட்டம்
ஒவ்வொரு பாட்டிலும்
உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப்
பூசியிருப்பாய்
உன் வரவால்
திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால்
வெள்ளாடை சூடி நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அப்செட்டில் கூலி பட நடிகை ரெபா.. ரசிகர்களிடம் வெளிப்படை பேச்சு.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com