78 days bonus for railway staff: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். இது தொடர்பான விவரம் வருமாறு.
78 days bonus for railway staff: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். இது தொடர்பான விவரம் வருமாறு.

Published on: September 24, 2025 at 6:58 pm
புதுடெல்லி, செப்.24, 2025: மத்திய அமைச்சரவை, 10,91,146 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடிக்கு 78 நாள்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) வழங்க ஒப்புதல் அளித்ததாக புதன்கிழமை (செப்டம்பர் 24, 2025) அறிவித்தது.
இந்த உற்பத்தி சார்ந்த போனஸ் என்பது, தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் துர்கா பூஜை/தசரா விடுமுறைக்கு முன்னதாக வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்தாண்டு, 11,72,240 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2,028.57 கோடியாக போனஸ் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டும் சுமார் 10.91 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான போனஸ் தொகை வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திக் குறிப்பில், “2024-25 ஆம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, “ரயில்வே 1,614.90 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி, கிட்டத்தட்ட 7.3 பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாட்டில் வேலைவாய்ப்பின்மை, ஊழல் அதிகரிப்பு.. ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com