Nagai MLA Alur Shahnawaz: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அரசியலுக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்.
Nagai MLA Alur Shahnawaz: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் அரசியலுக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார் வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்.
Published on: September 21, 2025 at 6:49 pm
சென்னை, செப்.21, 2025: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நேற்று (செப்.20, 2025) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகள் மற்றும் தனது பரப்புரைக்கு ஆளுங்கட்சியின் இடையூறுகள் குறித்து பேசினார்.
இதில் முக்கியமான தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து பேசினார். அதில், வெளிநாட்டு முதலீடா அல்லது வெளிநாட்டில் முதலீடா? என்றார்.இதைத் தொடர்ந்து திருவாரூரில் பேசிய விஜய், “திருவாரூரை கருவாடாக ஆக்கியுள்ளனர் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.யும் வி.சி.க துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ்.இது பற்றி ஷாநவாஸ் மேலும், “நடிகர் விஜய் படத்துக்கு கால்ஷீட் கொடுப்பது போல் அரசியலுக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவரின் அரசியல் தமிழ்நாட்டுக்கு உகந்தது அல்ல” என்றார்.
மேலும், வன்மத்துடன் பொய்யை பேசி சென்றுள்ளார் தவெக தலைவர் விஜய் என்றும் ஷாநவாஸ் கூறினார்.தொடர்ந்து, பொய்யைச் சொல்லி கவனத்தை ஈர்க்கும் பாரதிய ஜனதா கட்சியின் அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார் விஜய்.அண்ணாமலை மற்றும் ஆளுநர் போல் அவதூறுகளை, இட்டுக்கட்டிய பொய்களை வாய்க்கு வந்ததை பேசத் தொடங்கிவிட்டார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : விஜய் பேச்சில் குறைந்தப்பட்ச மாண்பு இல்லை.. சசிகாந்த் எம்.பி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com