Ma subramanian: நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை என்பதா? தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
Ma subramanian: நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை என்பதா? தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
Published on: September 20, 2025 at 5:33 pm
சென்னை, செப்டம்பர், 20, 2025: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று மதியம் நாகப்பட்டினத்தில் பரப்புரை செய்தார். அப்போது நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை குறித்து பேசினார்.
அந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்க போதிய மருத்துவர்கள் இல்லையாம் என குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு காட்டமாக பதில் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ” நாகப்பட்டினம் மருத்துவமனையை விஜய் பார்க்கட்டும்” எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மா சுப்பிரமணியன், ” தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ ஒருவர் எழுதி கொடுத்து பேசுவது போல் உள்ளது. வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட நாகை மருத்துவமனைக்குச் சென்று உண்மையை விஜய் பார்த்துக் கொள்ளட்டும்” என்றார்.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தற்போதுள்ள நிலவரப்படி திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது; பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு இன்னமும் தெளிவாக தெரியவில்லை. தேமுதிக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் எந்தக் கூட்டணியில் இணைய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியை பொருத்தமட்டில் தனித்து களம் காண்கின்றனர்; அதேபோல் தனது தலைமையிலான கூட்டணியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கப்படும் என தமிழக வெற்றிக்கழகமும் உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: இனியும் இப்படி கட்டுப்பாடுகள் விதித்தால்.. விஜய் சொன்ன அந்த வார்த்தை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com