H 1B visa fee to Rs 9 million: H-1B விசாவிற்கு ₹90 லட்சம் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்தியர்களுக்கு பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும்.
H 1B visa fee to Rs 9 million: H-1B விசாவிற்கு ₹90 லட்சம் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்தியர்களுக்கு பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும்.
Published on: September 20, 2025 at 10:27 am
நியூயார்க், செப்.20, 2025: குடியேற்றம் மற்றும் அமெரிக்க விசாக்கள் தொடர்பான தொடர்ச்சியான பிரச்சனைகளுக்கு மத்தியில், அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், H-1B விசாக்களுக்கு புதிய $100,000 கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த புதிய பிரகடனம் H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு நிதியுதவி செய்ய நிறுவனங்கள் செலுத்தும் கட்டணத்தை $100,000 ஆக அதிகரிக்கும். அதாவது, இது கிட்டத்தட்ட ₹90 லட்சமாகும்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (செப்.19, 2025) ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், “இந்த புதிய நடவடிக்கை நிறுவனங்களால் கொண்டுவரப்படும் விண்ணப்பதாரர்கள் மிகவும் திறமையானவர்களாகவும், அமெரிக்க தொழிலாளர்களால் மாற்ற முடியாதவர்களாகவும் இருப்பதை உறுதி செய்யும்” என்றார்.
.@POTUS signs a Proclamation to restrict the entry of certain H-1B aliens into the U.S. as nonimmigrant workers, requiring a $100,000 payment to accompany or supplement H-1B petitions for new applications.
— Rapid Response 47 (@RapidResponse47) September 19, 2025
AMERICA FIRST! pic.twitter.com/AzAUJzXawV
இந்தியர்களுக்கு சிக்கல்
கடந்த ஆண்டு H-1B விசாக்களால் இந்தியா மிகப்பெரிய பயனாளியாக இருந்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளில் 71% பேர் இதில் இந்தியர்கள் ஆவார்கள்.அதே நேரத்தில் சீனா 11.7% உடன் இரண்டாவது இடத்தில் இருந்தது என்று அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், Amazon.com மற்றும் அதன் கிளவுட்-கம்ப்யூட்டிங் பிரிவான AWS ஆகியவை 12,000 க்கும் மேற்பட்ட H-1B விசாக்களுக்கு ஒப்புதல் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணியாது’.. ட்ரம்புக்கு செய்தி அனுப்பிய புதின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com