Telangana techie shot dead by police in US: அமெரிக்க போலீசாரால் தெலங்கானா டெக்கி முகம்மது நிஜாமுதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Telangana techie shot dead by police in US: அமெரிக்க போலீசாரால் தெலங்கானா டெக்கி முகம்மது நிஜாமுதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: September 19, 2025 at 12:46 pm
நியூயார்க், செப்.19, 2025: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தனது அறைத் தோழனுடன் ஏற்பட்ட சண்டையில் தெலுங்கானாவைச் சேர்ந்த 30 வயதான டெக்கி முகம்மது நிஜாமுதீன் என்பவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் தகவல்கள் கூறுகின்றன.
இதில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர், 2016 ஆம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றார். எம்.எஸ் முடித்த பிறகு, அவர் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் நிபுணராக சேர்ந்தார், பின்னர் பதவி உயர்வு பெற்ற பிறகு கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது தந்தை முகமது ஹஸ்னுதீன், தனது மகனின் நண்பர் ஒருவரிடமிருந்து பெற்ற தகவல்களை மேற்கோள் காட்டி, செப்டம்பர் 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். எனினும் சரியாக என்ன நடந்தது என்பது குறித்து அவருக்கு இதுவரை தெரியவில்லை.
கோரிக்கை
இந்நிலையில், தனது மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று ஹஸ்னுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் அவர், ” தனது மகன் முகம்மது நிஜாமுதீன் அமெரிக்க சாண்டா கிளாரா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள ஏதோ ஒரு மருத்துவமனையில் இருப்பதாகவும் அறிந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “போலீசார் அவரை சுட்டுக் கொன்றதற்கான உண்மையான காரணங்கள் எனக்குத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பிரான்ஸ் அதிபர் மனைவி பெண்ணா, ஆணா? வலுத்த சர்ச்சை.. நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com