பிரதமர் மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்.. யார் இவர்? முழு விவரம்!

PM Narendra Modi in biopic Maa Vande : பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில், நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.

Published on: September 19, 2025 at 10:34 am

திருவனந்தபுரம், செப்.19, 2025: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மா வந்தே படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கிறார்.

யார் இந்த உன்னி முகுந்தன்?

கேரளத்தின் பிரபல நடிகரான உன்னி முகுந்தன் கேரளாவின் திருச்சூரில் செப்டம்பர் 22, 1987 அன்று பிறந்தவர் ஆவார். இவர், புதுக்காட்டில் உள்ள பிரஜ்யோதி நிகேதன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மற்றும் பத்திரிகைத் துறையில் பட்டப்படிப்பை முடித்தார். இந்நிலையில், உன்னி முகுந்தன் 2011 ஆம் ஆண்டு சீடன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனுஷ் நடித்த இந்தப் படம், 2002 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான நந்தனத்தின் ரீமேக் ஆகும்.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் காற்றுவீசும் மதராஸி.. ஒ.டி.டி ரிலீஸ் தேதி தெரியுமா?

இந்நிலையில், அவர் மலையாளத் திரைப்படத் துறையில் பாம்பே மார்ச் 12 என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதில் அவர் மம்மூட்டியுடன் நடித்தார். இந்தப் பாத்திரம் அவருக்கு சிறந்த அறிமுக நடிகர் பிரிவில் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில், 2012 ஆம் ஆண்டு வெளியான மல்லு சிங் திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர் ஏழாம் சூரியன், ஐ லவ் மீ மற்றும் இது பத்திரமணல் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

பிரதமர் பயோபிக் படம்

இந்நிலையில், மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது குறித்த அறிவிப்பைப் பகிர்ந்து கொண்ட உன்னி முகுந்தன், ““போர்களுக்கு அப்பால் உயர்ந்து வரும் ஒரு மனிதனின் கதை… யுகங்களுக்கு ஒரு புரட்சியாக மாற வேண்டும். #MaaVande அது. மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி-ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிமை மீண்டும் உயிர்ப்பிக்கட்டும், பிரகாசமான விஷயங்கள் காத்திருக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை கிராந்தி குமார் சி.எச். எழுதி இயக்க, வீர் ரெட்டி எம். சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றனர்.

இதையும் படிங்க : படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்.. ஐ.சி.யூ.வில் அனுமதி.. அவர் உடலுக்கு என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com