சென்னை, செப்.9, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.
கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “ஆனால், இங்கு தமிழ்நாட்டில்….?
பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்… தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.
கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைந்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ பரபரப்பு அறிக்கை.. முழு விவரம்!
TN Government: தமிழ்நாட்டில் பிற மாநில இளைஞர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது….
CP Radhakrishnan: இஸ்லாமிய மன்னர்கள் தங்களது படை எடுப்பினால் காசியை அளித்த போது, அதை மீட்டெடுக்க தமிழர்கள் இங்கிருந்து அங்கு சென்றார்கள் என துணை குடியரசுத் தலைவர்…
TVK Vijay: இது யாருக்கான ஆட்சி என கேள்வி எழுப்பி உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்; தமிழகம் ஆபத்தான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது என்பதையும்…
Women’s Hero Hockey India League: மகளிர் வீராங்கனை ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் (Shraci Bengal Tigers) அணி, ஜே.எஸ்.டபிள்யூ சோர்மா…
Pinaka rocket at Chandipur in Odisha: ஒடிசா மாநிலம் சந்திபூரில் 120 கி.மீ தூரம் செல்லக்கூடிய பினாகா ராக்கெட்-இன் முதல் விமானப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது….
Budget 2026: பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நிதி ஆயோக் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்….