New GST rates: தசரா பண்டிகைக்குள் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பெரிய வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தயாராக உள்ளது.
New GST rates: தசரா பண்டிகைக்குள் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பெரிய வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க அரசு தயாராக உள்ளது.
Published on: August 25, 2025 at 12:04 pm
Updated on: August 25, 2025 at 1:26 pm
புதுடெல்லி, ஆக.25 2025: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பை மாற்றியமைக்கத் தயாராகி வருகிறது. இதனால், ரூ.40,000 கோடி வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஜிஎஸ்டி செயலக அதிகாரிகளின் குழுவான ஃபிட்மென்ட் கமிட்டி, எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையின் வரைவு விவரங்களை உருவாக்கியுள்ளது.
மேலும், முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு விகித கட்டமைப்பை அறிமுகப்படுத்து. இதன் மூலம் வரி முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும், ஜிஎஸ்டி மற்றும் டிடிஎஸ் வசூலில் சுமார் ரூ.20,000 கோடியை மத்திய அரசு இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், பெரும்பாலான சேவைகளுக்கு, தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்கும் திட்டத்தைத் தவிர, பெரிய மாற்றங்கள் சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வருவாய் பாதிப்பு தற்காலிகமானது என்றும், வலுவான நுகர்வோர் செலவினங்களால் ஈடுசெய்ய முடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நுகர்வு அதிகரிக்க ஆண்டுதோறும் ரூ.12.75 லட்சம் வரை சம்பாதிக்கும் சம்பளதாரர்களுக்கு வருமான வரி தள்ளுபடியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 20-21 அன்று டெல்லியில் கூடிய விகித பகுத்தறிவு தொடர்பான அமைச்சர்கள் குழு (GoM), 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில அமைச்சர்கள் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு GST கட்டமைப்பிற்கு மாற ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, புதிய ஜி.எஸ்.டி விகிதங்கள் தசரா கொண்டாட்டத்துக்கு முன்னர் அமல்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Mutual Fund SIP Calculator: மாதம் ரூ.15,000 SIP முதலீடு, 5 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com