Actor Kamal Haasan: மாநிலங்களவை எம்.பி. ஆக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
Actor Kamal Haasan: மாநிலங்களவை எம்.பி. ஆக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 2025) பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

Published on: July 25, 2025 at 8:35 pm
புதுடெல்லி, ஜூலை 25 2025: பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை (ஜூலை 25 2025) மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். 2024 மக்களவைத் தேர்தலின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தது. இதற்கு ஈடாக இந்த மாநிலங்களவை எம்.பி பதவி தேர்தல் கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஜூலை 12ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். தமிழில் உறுதி மொழி ஏற்றுக் கொண்ட கமல்ஹாசன், நான் மிகவும் பெருமைப்படுகிறேன்; நாடாளுமன்றத்துக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்றார்.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் ஜூன் 6 ஆம் தேதி தமிழ்நாடு செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com