Trichy Velusamy: தி.மு.க.வை பார்த்து தனித்து நிற்க முடியுமா எனக் கேளுங்கள் என கொந்தளித்துப் பேசினார் காங்கிரஸின் திருச்சி வேலுசாமி.
Trichy Velusamy: தி.மு.க.வை பார்த்து தனித்து நிற்க முடியுமா எனக் கேளுங்கள் என கொந்தளித்துப் பேசினார் காங்கிரஸின் திருச்சி வேலுசாமி.
Published on: July 20, 2025 at 11:58 am
சென்னை, ஜூலை 20 2025: தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விவாதத்தில் கலந்துகொண்ட காங்கிரஸின் மூத்தத் தலைவர் திருச்சி வேலுசாமியிடம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திருச்சி வேலுசாமி, “இந்தக் கேள்வியை பார்த்து வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை மட்டுமே கேட்கிறீங்க? ஏன் தி.மு.க.வை பார்த்து கேட்கவில்லை.
தி.மு.க. எந்தத் தேர்தலிலாவது தனித்து நின்று வெற்றிப் பெற்றது உண்டா? அந்தக் கட்சியை பார்த்து ஏன் கேள்வி கேட்கவில்லை என்றார். முன்னதாக காமராஜர் குறித்து தி.மு.க.வின் விளக்கத்துக்கும் அவர் காட்டமாக பதிலளித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட்கள், கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஓரணியிலும், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அணிகள் ஓரணியிலும் களம் காண்கின்றன.
நாம் தமிழர் கட்சி தேர்தலை தனித்து சந்திக்கிறது. த.வெ.க.வும் தேர்தலை தனித்தே சந்திக்கும் எனத் தெரிகிறது. பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கருணாநிதியை புகழ்வதாக கருதி பெருந்தலைவரை இழிவுப்படுத்துவதா? டி.டி.வி தினகரன் கடும் கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com