Kerala nurse Nimisha Priya: ஏமனில் உள்ள கேரள நர்ஸ் வழக்கில் இன்னமும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. தியா பெற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.
Kerala nurse Nimisha Priya: ஏமனில் உள்ள கேரள நர்ஸ் வழக்கில் இன்னமும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. தியா பெற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.
Published on: July 16, 2025 at 10:40 pm
சனா, ஜூலை 16 2025: கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவின் வாழ்க்கை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் தற்காலிக தீர்வாக, ஏமனில் ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த அவரது மரணதண்டனை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தியா (இரத்த பணம்) வாங்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
மேலும், நீதியை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவருக்கு உச்சப்பட்ட தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
யார் இந்த நிமிஷா பிரியா?
கேரளாவைச் சேர்ந்த 36 வயதான செவிலியர் நிமிஷா பிரியா வேலை வாய்ப்புகளைத் தேடி 2008 இல் ஏமனுக்கு குடிபெயர்ந்தார். அவரது ஏமன் வணிக கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தியுடனான அவரது தொழில்முறை உறவு பின்னாள்களில் மிகவும் மோசமானது.
ஏமன் அதிகாரிகளின் கூற்றுப்படி, மஹ்தியிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்க அவர் மயக்க மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினார்.
ஆனால் அதிகப்படியான மருந்துகளை அவர் எடுத்துக் கொண்டதால் இது தலால் அப்தோ மஹ்தி உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது.
மரண தண்டனை
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு தனது ஏமன் தொழில் கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்ததற்காக நிமிஷா பிரியாவுக்கு 2020 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தியா அல்லது இரத்தப் பணம் மூலம் மன்னிப்பு பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அவரது குடும்பத்தினர் ஆராய்ந்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அத்தகைய நீதியை நிராகரித்து விட்டனர்.
ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?
பல்வேறு இஸ்லாமிய நாடுகள் ஷரியா அடிப்படையிலான குற்றவியல் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் குற்ற செயல்களுக்கு ஷரியத் சட்டப்படி தீர்ப்பு வழங்கப்படும்.
அந்த வகையில் நிமிஷா பிரியா வழக்கில் தியா எனப்படும் இரத்த பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பெற மறுத்தால், வழக்கு இன்னும் சிக்கலாகும்.!
இதையும் படிங்க : தலைக்கு மேல் தொங்கும் தூக்குக் கயிறு.. நர்ஸ் நிமிஷா பிரியா உயிர் காக்கப்படுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com