கோட் படத்தில் நடிகர் விஜய்யின் கார் ப்ளேட் நம்பர் வைரலாகிவருகிறது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
கோட் படத்தில் நடிகர் விஜய்யின் கார் ப்ளேட் நம்பர் வைரலாகிவருகிறது.
Published on: September 5, 2024 at 2:24 pm
Updated on: September 5, 2024 at 2:30 pm
GOAT Movie Car Number plate | நடிகர் விஜய்யின் கோட் படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் காரின் நம்பர் ப்ளேட் த.நா. 07 சி.எம் 2026 (TN 07 CN 2026) என உள்ளது. இந்தக் காரை விஜய் ஓட்டிவருகிறார்.
இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நிறுவிய பின்னர் வெளியாகும் முதல் படம் இதுவாகும்.
இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். படத்தில் ஏ.ஐ தோற்றத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். படம் முழுக்க விஜய் இந்த நம்பர் ப்ளேட் கொண்ட காரில்தான் பயணிக்கிறார்.
ரவிக்குமார் எம்.பி எதிர்ப்பு?
விஜய்யின் கோட் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், “இது சனாதனம்” என தி.மு.க. கூட்டணி வி.சி.க எம்.பி ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?
— Dr D.Ravikumar (@WriterRavikumar) September 5, 2024
The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய்… pic.twitter.com/hJceOJVjYM
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
(தொல்.சொல். 157)” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தள்ளிப்போகிறதா விஜய் மாநாடு? அனுமதி பெறுவதில் சிக்கல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com