முருக பக்தர்கள் மாநாடு அல்ல.. திராவிட எதிர்ப்பு மாநாடு.. அமைச்சர் ரகுபதி

Raghupathi: இந்து சமய அறநிலைத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது என புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.

Published on: June 23, 2025 at 3:12 pm

புதுக்கோட்டை ஜூன் 23 2025: தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான ரகுபதி புதுக்கோட்டையில் இன்று ( திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.

திராவிடத்திற்கு எதிரான மாநாடு

அப்போது, “மதுரை முருகர் மாநாட்டில் அதிமுக பங்கேற்றது வெட்கக்கேடானது” என கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, ” மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு திராவிடத்திற்கு எதிராகத்தான் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது” என்றார்.

இந்து சமய அறநிலைத்துறை இல்லை என்றால்..

இதை எடுத்து இந்து சமய அறநிலைத்துறை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, ” இந்து சமய அறநிலைத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது” என சர்ச்சையாக பேசினார்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த மாநாட்டில் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. இதனால் இது முருக பக்தர்கள் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு என திமுக ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜூன் 29ல் ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம்; முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!
Israeli airstrike on Iran

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com