Gautam Gambhir: வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை; மக்களின் வாழ்க்கைதான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
Gautam Gambhir: வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை; மக்களின் வாழ்க்கைதான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
Published on: June 5, 2025 at 10:15 pm
புதுடெல்லி, ஜூன் 5 2025: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “வெற்றி ஊர்வலங்கள் தேவை இல்லை என்றார். புதுடெல்லியில் இது குறித்து பேசிய அவர், “கொண்டாட்டங்களை விட மக்களின் வாழ்க்கை மிகவும் முக்கியம். இதனை நான் 2007ஆம் ஆண்டு முதலே சொல்லி வருகின்றேன். வெற்றி ஊர்வலங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதனை நடத்தவும் கூடாது” என்றார்.
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார்?
தொடர்ந்து, இந்திய பந்துவீச்சாளர் பும்ரா எந்தெந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து செய்தியாளர்களிடம் கெளதம் கம்பீர் பகிர்ந்துக் கொண்டார். இது தொடர்பாக பேசிய அவர், “பும்ரா டெஸ்ட் போட்டிகளில் எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய கௌதம் கம்பீர், “பும்ரா 5 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளில் விளையாடுவார் என்பது தொடர்பாக எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அவர் எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து பும்ரா உடன் பேசி முடிவு செய்யப்படும். பும்ரா தரமான பந்து வீச்சாளர். அவரை போன்ற பல பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர்” என்றார்.
ஆர்.சி.பி வெற்றி கொண்டாட்டம்
பெங்களூருவில் நடந்த ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கௌதம் கம்பீரிடம் இருந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
இதையும் படிங்க : ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com