சென்னை மே 28 2025: திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று (மே 28 2025) வெளியானது. இந்த பட்டியலின்படி திமுக எம்பி பி வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதியதாக எஸ் ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா (ரொக்கையா மாலிக்) ஆகிய இருவருக்கு புதியதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கு எம்பி பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் தேர்தல் ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, ம.நீ.ம சார்பில் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. ஆகிறார்.
பதவி காலம் முடிவு
தமிழ்நாட்டின் மாநிலங்களவை எம்பிகளான, அன்புமணி ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி), பி வில்சன் ( திராவிட முன்னேற்றக் கழகம்), வைகோ ( மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்), சண்முகம், சந்திர சேகரன் மற்றும் முகமது அப்துல்லா ஆகியோரின் பதவிக்காலம் 2025 ஜூலை மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், திமுக சார்பில் பி வில்சனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை தேர்தல்
தமிழ்நாட்டில் இருந்து ஆறு எம்பிக்கள் ஓய்வு பெறும் நிலையில் மாநிலங்களவை தேர்தல் 2025 ஜூன் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை உடனே அகற்றுக.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்