உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
Published on: September 3, 2024 at 7:48 pm
Russia attack on Ukraine | ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 180 பேர் காயம அடைந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மத்திய உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் இராணுவக் கல்வி நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 180 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
I received preliminary reports on the Russian strike in Poltava. According to available information, two ballistic missiles hit the area. They targeted an educational institution and a nearby hospital, partially destroying one of the telecommunications institute's buildings.… pic.twitter.com/TNppPr1OwF
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 3, 2024
இது குறித்து பேசிய அவர், “இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் அந்த பகுதியை தாக்கின. அவர்கள் ஒரு கல்வி நிறுவனம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையை குறிவைத்து, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கட்டிடங்களில் ஒன்றை பகுதியளவில் அழித்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஜெலென்ஸ்கி, “180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, பலர் இறந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 41 பேர் இறந்ததாக தெரியவருகிறது” என்றார்.
இரண்டு ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மருத்துவமனை மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தைத் தாக்கி, நிறுவனத்தின் கட்டிடங்களில் ஒன்றை பகுதியளவில் அழித்ததாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 11 பேர் உட்பட 25 பேரைக் காப்பாற்றியுள்ளோம். மீட்புப் பணி தொடர்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முற்பிறவி காதல், உறவு, கர்ப்பம்; அமெரிக்க பெண்ணை சீரழித்த யோகா ஆசிரியர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com