YouTuber Jyoti Malhotra arrested: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா என்ற யூ-டயூபர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? இவர் மீது பதியப்பட்ட வழக்குகள், குற்றச்சாட்டுகள் என்னென்ன?
YouTuber Jyoti Malhotra arrested: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா என்ற யூ-டயூபர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? இவர் மீது பதியப்பட்ட வழக்குகள், குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Published on: May 17, 2025 at 10:50 pm
புதுடெல்லி, மே 18 2025: ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த பிரபல டிராவல் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா என்பவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோதி மல்கோத்ரா 377,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட “டிராவல் வித் ஜோ” என்ற டிராவல் யூ-ட்யூப் சேனலை நடத்திவருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பில் தொடர்பில் இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதி மல்கோத்ராவை கைது செய்துள்ளனர். இந்நிலையில், வட இந்தியா முழுவதும் செயல்படும் பாகிஸ்தானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பு தொடர்பான விசாரணையில் ஒரு மைய நபராக மாறியுள்ளார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நொறுக்கிய இந்திய ராணுவம்.. சிந்தூர் யாத்திரை சென்ற பெண்கள்!
குற்றச்சாட்டு மற்றும் வழக்குப்பதிவு
அதாவது, இந்திய ரகசியங்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும், உளவு பார்த்ததாகவும் கூறி ஹிசார் போலீசாரால் ஜோதி மலகோத்ரா கைது செய்யப்பட்டார். அவர் மீது 1923 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் பிரிவுகள் 3, 4 மற்றும் 5 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்) பிரிவு 152 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு ஒன்றை பதிந்துள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஜோதி மல்கோத்ராவை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஹிசார் போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு தகவல்கள் அனுப்பியதாக பெண் யூ-ட்யூபர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து; 3 பேர் மரணம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com