Rahul Gandhi: ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவை உண்மை சரிபார்ப்பு குழு நிராகரித்துள்ளது. ஜெய்சங்கர் அவ்வாறு அறிக்கைகள் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது.
Rahul Gandhi: ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவை உண்மை சரிபார்ப்பு குழு நிராகரித்துள்ளது. ஜெய்சங்கர் அவ்வாறு அறிக்கைகள் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது.
Published on: May 17, 2025 at 9:14 pm
புதுடெல்லி, மே 17 2025: பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தானுக்கு இந்தியா தெரிவித்ததாகக் கூறப்படும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் காணொளியை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, 2025 மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஒப்புக்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக வெளியான கூற்றுக்களை வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (மே 17 2025) மறுத்தது. இது குறித்து வெளியான அறிக்கையில் இது தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னதாக இந்தியத் தரப்பு பாகிஸ்தானுக்குத் தகவல் அளித்தது குற்றம் எனப் பேசி இருந்தார்.
Informing Pakistan at the start of our attack was a crime.
— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2025
EAM has publicly admitted that GOI did it.
1. Who authorised it?
2. How many aircraft did our airforce lose as a result? pic.twitter.com/KmawLLf4yW
இந்த நிலையில், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராகுல் காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும் வீடியோ கிளிப்பையும் பகிர்ந்து கொண்டார். அதில், “நடவடிக்கையின் தொடக்கத்தில், நாங்கள் பாகிஸ்தானுக்கு ஒரு செய்தியை அனுப்பினோம். நாங்கள் பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்குகிறோம். நாங்கள் இராணுவத்தைத் தாக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
மறுப்பு
இதற்கிடையில், பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவும் ஜெய்சங்கர் தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை மறுத்துள்ளது. மேலும், ஜெய்சங்கர் அத்தகைய அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை என்றும் தவறாக மேற்கோள் காட்டப்படுவதாகவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க : கர்னல் குரேஷி அவமதிப்பு.. பா.ஜ.க அமைச்சர் மீது காங்கிரஸ் புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com