தமிழ் பாடகி சுசித்ரா மீது மலையாள நடிகை ரீமா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ் பாடகி சுசித்ரா மீது மலையாள நடிகை ரீமா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Published on: September 3, 2024 at 6:39 pm
Updated on: September 3, 2024 at 7:23 pm
Rima Kallingal vs singer Suchitra | தமிழ் பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில் மலையாள நடிகை ரீமா மற்றும் அவரது கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆஷிக் அபு மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அப்போது, “நடிகையும் அவரது கணவரும் போதைப்பொருள் பயன்படுத்தப்படும் வீட்டில் வழக்கமாக பார்ட்டி நடத்துகின்றனர்” என கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், “இந்த பார்ட்டிகளில் பல இளம் பெண்களுக்கும் போதைப்பொருள் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ரீமா, பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து ரீமா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்த காட்டுமிராண்டித்தனமான கோட்பாடுகள் முக்கிய செய்தியாக வரவில்லை என்றாலும், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் புகார் அளித்து அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்” எனவும் நடிகை ரீமா தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாடகி சுசத்ரா தமிழ் சினிமா நடிகை நடிகர்கள் சிலர் மீதும் ரேவ் போதைப்பொருள் பார்ட்டி புகாரை முன்வைத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: பெண்களின் மார்பகங்களை பார்த்தால் உணர்ச்சி வருமா? காதல் சரண்யா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com